» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வளர்ப்புப் பன்றிகள் உயிரிழந்த சோகத்தில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:21:29 AM (IST)
ஆழ்வார்திருநகரி அருகே வளர்ப்புப் பன்றிகள் நோய் தாக்கி உயிரிழந்த மனவேதனையில், வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வதம்போகித் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை (32), தந்தை பெயர் செல்வம். இவர் அப்பகுதியில் உள்ள வைரமாளிகை ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சின்னதுரைக்கு ஈஸ்வரி (28) என்ற மனைவியும், இசக்கி (8), இசக்கியம்மாள் (5), இசக்கி திவ்யா (4) ஆகிய மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
சின்னதுரை தனது வீட்டில் உப தொழிலாகப் பன்றிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அவர் வளர்த்து வந்த பன்றிகளில் மூன்று பன்றிகள் நோய் பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழந்தன. தான் ஆசையாக வளர்த்த விலங்குகள் இறந்ததால் சின்னதுரை கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சின்னதுரை வீட்டின் இரும்பு கம்பியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துத் தகவல் அறிந்த ஆழ்வார்திருநகரி காவல்துறை உதவி ஆய்வாளர் பாலன், சம்பவ இடத்திற்கு விரைந்து சின்னதுரையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தேர்தல் விதிமீறல்: ரூ.3.97 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:39:31 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:09:06 PM (IST)

காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:30:34 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:43:45 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை : ஆட்சியர் நேரில் ஆய்வு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:17:50 AM (IST)







