» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்பேத்கர் பிறந்த நாள் விழா: அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை செலுத்தினார்!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:13:24 AM (IST)


தூத்துக்குடியில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், கலை இலக்கிய அணிச் செயலாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மருத்துவ அணித் தலைவர் அருண் குமார், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பாலகுருசாமி, மாநகராட்சி கவுன்சிலர் வைதேகி, போக்குவரத்துத் தொழிற்சங்கத் தலைவர் முருகன், சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், தேமுதிக மாவட்டச் செயலாளர் தயாளலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

அதிமுக சார்பில் 



தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு  மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளருமான எஸ்.பி சண்முகநாதன் மற்றும் கழக வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாநகர செயலாளரும், தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளருமான சி.த செல்லபாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்நிகழ்வில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் ஆறுமுக நயினார், மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச்செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டணர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory