» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சித்திரை விசு : தங்க அங்கி - கனிகளால் சிறப்பு அலங்காரம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 10:44:07 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை விசு திருநாளை முன்னிட்டு, இன்று சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன.
வாக்கிய முறைப்படி, 'விசுவாவசு' ஆண்டு நிறைவடைந்து, புதிய 'பராபவ' ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையொட்டி தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் அதிகாலை 5:00 மணிக்குத் திருக்கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 5:30 மணிக்கு மாரியம்மனுக்குப் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, அம்மனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, பல்வேறு வகையான காய்கனிகளால் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மங்கல இசை முழங்க அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. புதிய ஆண்டின் முதல் நாளில் அம்மனைத் தரிசித்து அருள் பெற, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையொட்டி பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் வரிசைப்படுத்துதல் வசதிகளைக் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தேர்தல் விதிமீறல்: ரூ.3.97 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:39:31 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:09:06 PM (IST)

காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:30:34 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:43:45 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை : ஆட்சியர் நேரில் ஆய்வு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:17:50 AM (IST)







