» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆயிரம் பயனாளிகளுக்கு ஃபித்ரா அரிசி வழங்கல்!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:14:57 PM (IST)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகரக் கிளை சார்பில், புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கான ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் உள்ள கட்சியின் நகர அலுவலகமான தியாகி பீ.எச்.எம். முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ். அபூ சாலிஹ் துஆ பிரார்த்தனை செய்து நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
மாவட்டச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு ஃபித்ரா அரிசியின் முதல் பொதியை வழங்கிப் பகிர்வுப் பணியைத் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகரப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் ஆயிரம் பயனாளிகளுக்கு அரிசி வழங்கினர்.
மூத்த நிர்வாகிகள் எம்.ஏ. முஹம்மத் ஹஸன், பாரூக், நிஃமத்துல்லாஹ், அயலக அணி மாநில நிர்வாகி என்.டீ. முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகளான பெத்தப்பா சுல்தான், எம்.ஏ.சி. சுஹைல் இப்ராஹீம், அரபி ஷாஹுல் ஹமீத், மலேஷியா அப்துல் காதிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அஹ்மத் நெய்னார் பள்ளி இமாம் கே.எம்.என். உமர் அப்துல் காதிர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாகத் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே. சாலிஹ் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:59:40 PM (IST)

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து குரும்பூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:57:27 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த எம்பவர் இந்தியா கோரிக்கை!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:51:37 PM (IST)

வேடநத்தம் மாணவி கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மாதர் சங்கம் எஸ்பியிடம் மனு!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:44:45 PM (IST)

பிளஸ் 2 மாணவி படுகொலை: குரும்பூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
ஞாயிறு 15, மார்ச் 2026 2:37:03 PM (IST)

தமிழகத்தைப் புறக்கணிக்கும் மோடி அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
ஞாயிறு 15, மார்ச் 2026 1:58:29 PM (IST)







