» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிளஸ் 2 மாணவி படுகொலை: குரும்பூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
ஞாயிறு 15, மார்ச் 2026 2:37:03 PM (IST)

வேடநத்தம் மாணவி படுகொலைக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் குரும்பூர் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல்போன பிளஸ் 2 மாணவி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் குரும்பூர் அருகே உள்ள அழகப்பபுரம் பஞ்.,சில் யாதவர் இளைஞரணி கூட்டமைப்பும், ஊர் பொதுமக்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போராட்டம் தீவிரமடைந்ததால், அனைவரும் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குரும்பூர் இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப் இன்ஸ்பெக்டர் சண்முகராஜ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ் மறியலில் ஈடுபட்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். இன்னும் ஓரிரு நாட்களில் கைது செய்துவிடுவோம் என்றார். இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தைப் புறக்கணிக்கும் மோடி அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
ஞாயிறு 15, மார்ச் 2026 1:58:29 PM (IST)

ராஜ்யசபா எம்.பி. கான்ஸ்டண்டன் ரவீந்திரனுக்கு தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!
ஞாயிறு 15, மார்ச் 2026 1:53:18 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மோதி விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:39:35 AM (IST)

பக்கத்து வீட்டில் 15 பவுன் நகை திருடிய வாலிபர் கைது : 24 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:13:08 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை குறைந்தது: வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:08:32 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.21.68 கோடி மதிப்பிலான வழக்குகளில் தீர்ப்பு
ஞாயிறு 15, மார்ச் 2026 9:00:53 AM (IST)







