» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேடநத்தம் மாணவி கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மாதர் சங்கம் எஸ்பியிடம் மனு!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:44:45 PM (IST)

வேடநத்தம் பகுதியில் பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில்: கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்களைத் தாமதமின்றி உடனடியாகக் கைது செய்ய வேண்டும். புகார் அளிக்க வந்தபோது அலட்சியம் காட்டிய காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு, சட்ட உதவி மற்றும் உளவியல் ஆலோசனைகளை அரசு வழங்க வேண்டும்.
"பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசு மற்றும் காவல்துறையின் முதன்மையான பொறுப்பு. இந்த மனிதத்தன்மையற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என்று சங்க நிர்வாகிகள் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இந்த நிகழ்வின் போது மாவட்டத் தலைவர் கமலம், மாவட்டச் செயலாளர் ஜானகி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா, மத்தியக்குழு உறுப்பினர் சசிகலா, மாநிலத் துணைச் செயலாளர் பூமயில் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வேடநத்தம் பகுதிக்கு நேரில் சென்றனர். அங்கு உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆயிரம் பயனாளிகளுக்கு ஃபித்ரா அரிசி வழங்கல்!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:14:57 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:59:40 PM (IST)

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து குரும்பூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:57:27 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த எம்பவர் இந்தியா கோரிக்கை!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:51:37 PM (IST)

பிளஸ் 2 மாணவி படுகொலை: குரும்பூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
ஞாயிறு 15, மார்ச் 2026 2:37:03 PM (IST)

தமிழகத்தைப் புறக்கணிக்கும் மோடி அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
ஞாயிறு 15, மார்ச் 2026 1:58:29 PM (IST)







