» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து குரும்பூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

ஞாயிறு 15, மார்ச் 2026 7:57:27 PM (IST)



சமையல் எரிவாயு  தட்டுப்பாட்டைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, குரும்பூர் பஜாரில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆழ்வை., மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் சதிஷ்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் பாதாளமுத்து வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் காஸ் தட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் பாக்கியராஜ், ஒன்றிய அமைப்பாளர் சோலை நட்டார், ஆத்தூர் டவுன் பஞ்., தலைவர் கமால்தீன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சாரதா பொன் இசக்கி, துணை அமைப்பாளர் லின்ஸி, நகர செயலாளர்கள் ஆத்தூர் முருகானந்தம், தென்திருப்பேரை முத்துவீரபெருமாள், நாசரேத் ஜமீன் சாலமோன், ஆழ்வை கோபிநாத், தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ், விசிக ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory