» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ராஜ்யசபா எம்.பி. கான்ஸ்டண்டன் ரவீந்திரனுக்கு தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!
ஞாயிறு 15, மார்ச் 2026 1:53:18 PM (IST)

புதிதாக ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டண்டன் ரவீந்திரனுக்கு தூத்துக்குடியில் திமுக மற்றும் மீனவ சமுதாயத்தினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமானம் மூலம் வாகைகுளம் வந்தடைந்த கான்ஸ்டண்டன் ரவீந்திரனுக்கு, தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் நகரின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அம்பேத்கர், பெரியார், அண்ணா, வ.உ. சிதம்பரம் பிள்ளை, காமராஜர், குரூஸ் பர்னாந்து, ரோச் விக்டோரியா, கே.வி.கே. சாமி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தொடர்ந்து பனிமய மாதா பேராலயத்திற்குச் சென்று அன்னையை வழிபட்டார். பின்னர் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி மற்றும் மாதா கோவில் பங்குத்தந்தை ஸ்டார்வின் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி மற்றும் மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சங்க நிர்வாகிகள், சமுதாயத் தலைவர்கள் மற்றும் முத்துகுளித்துறை பரதர் நலச் சங்க நிர்வாகிகள் எனப் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி.க்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 மாணவி படுகொலை: குரும்பூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
ஞாயிறு 15, மார்ச் 2026 2:37:03 PM (IST)

தமிழகத்தைப் புறக்கணிக்கும் மோடி அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
ஞாயிறு 15, மார்ச் 2026 1:58:29 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மோதி விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:39:35 AM (IST)

பக்கத்து வீட்டில் 15 பவுன் நகை திருடிய வாலிபர் கைது : 24 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:13:08 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை குறைந்தது: வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:08:32 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.21.68 கோடி மதிப்பிலான வழக்குகளில் தீர்ப்பு
ஞாயிறு 15, மார்ச் 2026 9:00:53 AM (IST)







