» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.21.68 கோடி மதிப்பிலான வழக்குகளில் தீர்ப்பு

ஞாயிறு 15, மார்ச் 2026 9:00:53 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 4,771 வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் மொத்தம் ரூ.21.68 கோடி மதிப்பிலான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவர் ஆர்.வசந்தி தலைமையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்காக தூத்துக்குடியில் 5 அமர்வுகள், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தலா 2 அமர்வுகள், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம் தலா 1 அமர்வு என மாவட்டம் முழுவதும் மொத்தம் 14 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகள், சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. வங்கி வாராக்கடன் 315 வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு, 154 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்தத் தொகை ரூ. 4.89 கோடியாகும்.

5,149 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 4,617 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டது. இதன் மதிப்பு ரூ. 16.78 கோடியாகும். ஒட்டுமொத்தமாக நேற்று நடைபெற்ற விசாரணையில் 5,464 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 4,771 வழக்குகளுக்கு வெற்றிகரமாகத் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்தத் தீர்வுத் தொகை ரூ. 21 கோடியே 68 லட்சத்து 86 ஆயிரத்து 595 ஆகும்.

இந்த நிகழ்வில் நீதிபதிகள், காப்பீட்டு நிறுவன மேலாளர்கள், வங்கி அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளைத் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான ஏ.வி. சுபாஷினி செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory