» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி மோதி விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு!

ஞாயிறு 15, மார்ச் 2026 10:39:35 AM (IST)

தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு இரண்டாக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பி.எஸ். கோவில் தெருவைச் சேர்ந்த வீரபாகு என்கிற கண்ணன் (46) மற்றும் கூட்டம்புளி முத்து நகரைச் சேர்ந்த பிச்சைமணி (60) ஆகிய இருவரும் சென்ட்ரிங் தொழிலாளர்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இருவரும் டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தில் மடத்தூர் பைபாஸ் சாலையில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

பெட்ரோல் பங்க் அருகே அவர்கள் சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று முன்னால் சென்ற மற்றொரு லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது லாரி மிக அருகில் வந்ததால் நிலைதடுமாறிய இருவரும் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தனர். இதில் லாரியின் சக்கரம் ஏறியதில் வீரபாகு கண்ணனின் கால்கள் சிதைந்து துண்டானது. பிச்சைமணிக்கு இடுப்பு மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

படுகாயமடைந்த இருவரும் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் வீரபாகு கண்ணன் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிச்சைமணிக்குத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்த அம்மாமுத்து (27) என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory