» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு - தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 14, மார்ச் 2026 10:35:25 AM (IST)
தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சென்ட்ரிங் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொருவர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பி.எஸ். கோவில் தெருவைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் வீரபாகு என்கிற கண்ணன் (46). இவரும், கூட்டம்புளி முத்து நகரைச் சேர்ந்த வேல்கனி என்பவரின் மகன் பிச்சைமணி (60) என்பவரும் சென்ட்ரிங் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில், இருவரும் டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தில் மடத்தூர் பைபாஸ் சாலையில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். சாய் பாபா பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி முன்னால் சென்ற மற்றொரு லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளது.
அப்போது லாரி மிக அருகில் வந்ததால் நிலைதடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர். இதில் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறியதில் வீரபாகு கண்ணனின் இரண்டு கால்களும் சிதைந்து, இடது கால் துண்டானது. பிச்சைமணிக்கு இடுப்பு எலும்பு முறிவு மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்த இருவரும் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வீரபாகு கண்ணனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 8 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.
பிச்சைமணிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்த அம்மாமுத்து (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆயிரம் பயனாளிகளுக்கு ஃபித்ரா அரிசி வழங்கல்!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:14:57 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:59:40 PM (IST)

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து குரும்பூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:57:27 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த எம்பவர் இந்தியா கோரிக்கை!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:51:37 PM (IST)

வேடநத்தம் மாணவி கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மாதர் சங்கம் எஸ்பியிடம் மனு!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:44:45 PM (IST)

பிளஸ் 2 மாணவி படுகொலை: குரும்பூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
ஞாயிறு 15, மார்ச் 2026 2:37:03 PM (IST)







