» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபர் கொலை வழக்கில் மாமனாருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 9, மார்ச் 2026 9:45:18 PM (IST)
தூத்துக்குடியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மாப்பிள்ளையூரணி பகுதியில் வசித்து வந்த ஹரிகுமார் (25), குடும்பப் பிரச்சினை காரணமாக அவரது மாமனார் சுப்பிரமணி (58) மற்றும் உறவினர் சத்தியநாராயணன் (34) ஆகியோரால் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது குறித்து தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, புலனாய்வு முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தாண்டவம் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு விசாரணைகளையும் முடித்த நீதிபதி இன்று (09.03.2026) தீர்ப்பளித்தார்.
அதில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சத்தியநாராயணனை விடுதலை செய்தும், முக்கியக் குற்றவாளியான சுப்பிரமணிக்கு கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், கொலையை மறைத்த குற்றத்திற்காக அவருக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கின் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத் தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், வழக்கைப் புலனாய்வு செய்த அப்போதைய ஆய்வாளர் தங்ககிருஷ்ணன், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ் மற்றும் உதவி புரிந்த தலைமை காவலர் சங்கரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு (2026) இதுவரை மொத்தம் 7 கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி இசைத் விழா: 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
திங்கள் 9, மார்ச் 2026 9:37:29 PM (IST)

புதுக்கோட்டை வியாபாரிகள் சங்க 16-ஆம் ஆண்டு விழா: மேயர் ஜெகன் பெரியசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
திங்கள் 9, மார்ச் 2026 9:24:37 PM (IST)

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: சிறந்த நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஊக்கப்பரிசு
திங்கள் 9, மார்ச் 2026 8:43:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திங்கள் 9, மார்ச் 2026 5:39:37 PM (IST)

ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகள்: வ.உ.சி துறைமுகம் வரலாற்றுச் சாதனை!
திங்கள் 9, மார்ச் 2026 4:31:25 PM (IST)

அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி : மாணவிகள் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:13:41 PM (IST)








