» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதுக்கோட்டை வியாபாரிகள் சங்க 16-ஆம் ஆண்டு விழா: மேயர் ஜெகன் பெரியசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

திங்கள் 9, மார்ச் 2026 9:24:37 PM (IST)



தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 16-ஆம் ஆண்டு விழா ஐம்பெருவிழாவாக நடைபெற்றது. 

சங்கத் தலைவர் பீட்டர் தலைமை வகித்த இந்த விழாவில், வணிகர் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, பேரமைப்பின் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, சங்கத்திற்காகப் புதிதாகக் கட்டப்படவுள்ள கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், புதுக்கோட்டை பஜார் பகுதியில் பாதுகாப்பு நலன் கருதி அமைக்கப்பட்ட புதிய கண்காணிப்பு கேமராக்களையும் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு, நலிந்த வியாபாரிகளுக்குத் தையல் இயந்திரங்கள், கிரைண்டர்கள் மற்றும் அயர்ன் பாக்ஸ்களை வழங்கினார். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்குச் சீருடைகளும், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

விழாவில் பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளர் காளிதாசன், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மண்டலத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், வைகுண்டராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சோலையப்பராஜா, பாஸ்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ராபின்சன் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில், மாநில துணைத் தலைவர் வெற்றிராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், வடக்கு மாவட்ட பொருளாளர் ஆனந்த் பொன்ராஜ், வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புராஜ், செய்திதொடர்பாளர் அந்தோணி இன்பராஜ், கோவில்பட்டி மாவட்ட பொருளாளர் மாரியப்பன், தெற்கு மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் அருணாச்சலம், கோவில்பட்டி செயலாளர் ரவி மாணிக்கம், ரத்னா ஏனென்சிஸ் தர்மராஜ், லட்சுமி ஜுவல்லர்ஸ் கணேசன், ஜேபிஆர் பில்டர்ஸ் பாரத், அன்னை எலக்ட்ரிகல்ஸ் சக்திகுமார், வி.பி.எம். ஹாலோபிளாக் பழனி மகாரான், வி.எஸ்.ஏ. பில்டர்ஸ் சுப்பிரமணியன், அஜித்குமார், ராஜரத்தினம் ஸ்டோர்ஸ் சுரேஷ், மருத்துவர்கள் வாசன், ஜெயலட்சுமி,  வள்ளி (எ) லட்சுமி, ஸ்ரீமுத்து சரஸ்வதி சூப்பர் மார்க்கெட் ராஜாமணி, பி.எம்.மோட்டார்ஸ் மாரியப்பன், ஜானகி பேப்பர் ஸ்டோர்ஸ் தாமோதரன், தூத்துக்குடி மாவட்ட மருந்து விற்பனை சங்க தலைவர் முனியசாமி, மெர்கண்டைல் வங்கி மேலாளர் வினோத், கனரா வங்கி மேலாளர் ஸ்ரீதர்ராஜா, சத்யா மஹால் பூலோகபாண்டியன், மேலகூட்டுடன்காடு சங்க தலைவர் ஆதிநாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி ரவிதாகூர் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். நிறைவாக சங்க செயலாளர் ஜி.முருகன் நன்றியுரையாற்றினார்.

விழாவில், துணைத்தலைவர் சர்க்கரை, செயலாளர் கே.பெரியசாமி, இளைஞரணி அமைப்பாளர்கள் டேவிட்குமரன், சக்திலிங்கம், ஜெயக்குமார், துணைச்செயலாளர்கள் வியாகப்பன், லெனின், ராஜன், கருப்பசாமி, சந்திரசேகரன், இணைச்செயலாளர்கள் சக்திகுமார், ராபின்சன்குருசோ, சரவணன், பழனிமகாராஜன், குமரேசன், இளைஞரணி பொறுப்பாளர்கள் முத்துகுமார், பொன்முருகன், சங்கர் நாராயணன், ராஜன், சிங்கராயர், செல்லப்பா, சரவணன், கௌரவ ஆலோசகர்கள் செந்தில்ஆறுமுகம், எல்.சுப்பையா, வேலாயுதம், ராமச்சந்திரன், வி.அருள்ராஜ், எஸ்.முத்துகுமார், சங்கர் (எ) அம்பி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory