» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: சிறந்த நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஊக்கப்பரிசு
திங்கள் 9, மார்ச் 2026 8:43:18 PM (IST)

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மின்னணுப் பரிவர்த்தனை வாயிலாக அதிக அளவில் பயணச்சீட்டுகளை வழங்கிய சிறந்த நடத்துநர்களுக்கு ஊக்கப்பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கடந்த பிப்ரவரி-2026 மாதத்தில், மின்னணுப் பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்திப் பயணச்சீட்டுகளை வழங்கியதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் மண்டலங்களில் தலா இரண்டு சிறந்த நடத்துநர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட நடத்துநர்களுக்குத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நடராஜன், ஊக்கப்பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்வில் முதன்மை நிதி அலுவலர் முரளிதரன், திருநெல்வேலி பொது மேலாளர் சிவகுமார், தூத்துக்குடி பொது மேலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்து நடத்துநர்களைக் கௌரவித்தனர்.
மின்னணுப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு, மற்ற பணியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பேருந்துகளில் சில்லறைத் தட்டுப்பாடு குறைவதோடு, வெளிப்படையான பணப்பரிவர்த்தனை உறுதி செய்யப்படுவதாகப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாலிபர் கொலை வழக்கில் மாமனாருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 9, மார்ச் 2026 9:45:18 PM (IST)

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி இசைத் விழா: 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
திங்கள் 9, மார்ச் 2026 9:37:29 PM (IST)

புதுக்கோட்டை வியாபாரிகள் சங்க 16-ஆம் ஆண்டு விழா: மேயர் ஜெகன் பெரியசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
திங்கள் 9, மார்ச் 2026 9:24:37 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திங்கள் 9, மார்ச் 2026 5:39:37 PM (IST)

ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகள்: வ.உ.சி துறைமுகம் வரலாற்றுச் சாதனை!
திங்கள் 9, மார்ச் 2026 4:31:25 PM (IST)

அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி : மாணவிகள் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:13:41 PM (IST)








