» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டுமனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
சனி 7, மார்ச் 2026 3:23:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரம் கிராம மக்கள், தங்களுக்கு 30 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 1996-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசால், மேல்மாந்தை ஊராட்சியைச் சேர்ந்த 110 ஆதிதிராவிடக் குடும்பங்களுக்குத் தலா 3 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட 'வீட்டுமனை ஒப்படை உத்தரவு' படிவத்தைக் கொண்டு, இக்குடும்பத்தினர் அங்கு வீடுகள் கட்டி இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
பழைய வீடுகளை இடித்துவிட்டுப் புதிய வீடுகள் கட்ட முற்படும்போது, முறையான பட்டா இல்லாததால் அனுமதி மறுக்கப்படுகிறது. பட்டா இல்லாத காரணத்தால் புதிய மின் இணைப்புகளையும் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சொந்தமாக நிலம் இருந்தும் அதனைப் பயன்படுத்த முடியாததால், பலர் விவசாய நிலங்களிலும், ஊருக்குள் வாடகை வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு என அனைத்து நிலைகளிலும் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
"நிலம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாத' கதையாக உள்ளது" என ஆதங்கப்படும் அப்பகுதி மக்கள், உடனடியாகப் பட்டா வழங்காவிட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம். ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்போம் எனத் தீர்மானமாகத் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.110.66 கோடி நலத்திட்ட உதவிகள் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 5:16:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சனி 7, மார்ச் 2026 4:52:06 PM (IST)

துணை முதல்வர் முன்னிலையிலேயே ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய மாற்றுத்திறனாளி இளைஞர்!
சனி 7, மார்ச் 2026 4:00:56 PM (IST)

விளாத்திகுளம் தொகுதி: திமுக சார்பில் போட்டியிட எஸ்.எஸ்.ரவி விருப்பமனுத் தாக்கல்!
சனி 7, மார்ச் 2026 3:13:00 PM (IST)

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
சனி 7, மார்ச் 2026 12:31:36 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
சனி 7, மார்ச் 2026 12:04:40 PM (IST)







