» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளம் தொகுதி: திமுக சார்பில் போட்டியிட எஸ்.எஸ்.ரவி விருப்பமனுத் தாக்கல்!
சனி 7, மார்ச் 2026 3:13:00 PM (IST)

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட புதூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.எஸ்.ரவி விருப்பமனு அளித்துள்ளார்.
1981-ம் ஆண்டு முதல் திமுகவின் ஆயுள் கால உறுப்பினராக உள்ள இவர், கடந்த 45 ஆண்டுகளாக கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மறைந்த என். பெரியசாமியின் தீவிர ஆதரவாளரான இவர், கடந்த 2022-ல் திமுகவிற்காக மாவட்ட கவுன்சிலர் விருப்பமனுவை வாபஸ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது முறையாக இத்தொகுதிக்கு விருப்பமனு அளித்துள்ளார். விளாத்திகுளம் தொகுதியில் எஸ்.எஸ்.ரவி தவிர, தற்போதைய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மற்றும் ஏ.சி. வசந்தம் ஜெயக்குமார் ஆகியோரும் திமுக சார்பில் விருப்பமனு அளித்துள்ளனர். இவர்களிடையே நிலவும் உட்கட்சிப் போட்டியால் தொகுதி களம் சூடுபிடித்துள்ளது.
மறுபுறம், இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்றும், அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவின் வேட்பாளராகப் பழைய விசுவாசி எஸ்.எஸ்.ரவி தேர்வு செய்யப்படுவாரா அல்லது தற்போதைய எம்.எல்.ஏவுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது தலைமையின் முடிவிலேயே உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.110.66 கோடி நலத்திட்ட உதவிகள் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 5:16:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சனி 7, மார்ச் 2026 4:52:06 PM (IST)

துணை முதல்வர் முன்னிலையிலேயே ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய மாற்றுத்திறனாளி இளைஞர்!
சனி 7, மார்ச் 2026 4:00:56 PM (IST)

வீட்டுமனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
சனி 7, மார்ச் 2026 3:23:06 PM (IST)

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
சனி 7, மார்ச் 2026 12:31:36 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
சனி 7, மார்ச் 2026 12:04:40 PM (IST)







