» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

சனி 7, மார்ச் 2026 12:31:36 PM (IST)


99 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் என்று தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 99 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். சொல்லாத வாக்குறுதிகளையும் செய்துள்ளோம். நாங்கள் தொடர்ந்து  ஐந்து ஆண்டுகளாக மக்களை சந்தித்து வருகிறோம். முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் என அனைவரும் களத்தில் இருக்கிறோம்.
 
திமுகவை பொருத்தவரை கலைஞர் சொன்னது போன்று சொன்னதை செய்வோம் செய்ததை சொல்வோம். மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் என்பது 2000 ரூபாய் உயர்த்தி கொடுக்கப்படும் என்று சொல்லி உள்ளனர் இந்த நம்பிக்கை மக்களிடம் உள்ளது.  தலைவர் என்ன முடிவெடுக்கிறாரோ நான் அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory