» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அணுகு சாலை அமைக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் : அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பு!
சனி 7, மார்ச் 2026 10:35:25 AM (IST)

கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பால அணுகு சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, வரும் 10-ஆம் தேதி அதிமுக தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி மில் மேம்பால அணுகு சாலை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையில், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துடன், உயிருக்கு ஆபத்தான முறையில் பயணிக்கும் சூழல் நிலவுகிறது.
குறிப்பாக, இப்பகுதியில் உள்ள சீனிவாசன் நகர், இந்திரா நகர், அத்தை கொண்டான் குடியிருப்பு வாசிகள் இந்தச் சாலையையே பிரதானமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சாலையைச் சீரமைக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒன்றிய செயலாளர் அழகர்சாமி தலைமையில் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒன்றிணைந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் டிஎஸ்பி அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
மனுவில் கூறியுள்ளதாவது: "பொதுமக்களின் நலன் கருதி இந்தச் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். தவறும் பட்சத்தில், வரும் 10-ஆம் தேதி அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்களைத் திரட்டிப் பெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது பாஜக ஒன்றிய தலைவர் ஜீவா கண்ணன் மற்றும் அதிமுக, பாஜக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
சனி 7, மார்ச் 2026 12:31:36 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
சனி 7, மார்ச் 2026 12:04:40 PM (IST)

பஞ்ச் டயலாக்' பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள்: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் சாடல்!
சனி 7, மார்ச் 2026 11:01:49 AM (IST)

தூத்துக்குடியில் துணிகரம்: கத்தி முனையில் 7 பவுன் நகை பறிப்பு - 3 மணி நேரத்தில் குற்றவாளி அதிரடி கைது!
சனி 7, மார்ச் 2026 10:21:03 AM (IST)

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 7, மார்ச் 2026 8:48:07 AM (IST)

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 பேர் கைது!
சனி 7, மார்ச் 2026 8:42:28 AM (IST)








