» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை : துரை வைகோ எம்.பி.யிடம் மதிமுக சார்பில் மனு

சனி 21, பிப்ரவரி 2026 11:52:45 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கூடுதல் ரயில்களை இயக்க மத்திய அரசிடம் வலியுறுத்தக் கோரி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடிக்கு வருகை தந்த ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோவை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வே. ரஞ்சன் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகள்:

வந்தே பாரத் இணைப்பு ரயில்: நெல்லையிலிருந்து சென்னைக்கு காலை 6:00 மணிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க, திருச்செந்தூர், காயல்பட்டணம், ஆறுமுகநேரி மற்றும் நாசரேத் பகுதி மக்கள் அதிகாலையில் நெல்லை செல்வதற்குப் போதிய பேருந்து அல்லது ரயில் வசதிகள் இல்லை. இதற்குத் தீர்வாக, நெல்லையில் இரவு நேரத்தில் பராமரிப்புக்காக நிறுத்தப்படும் ரயில்களில் ஒன்றை, இரவு 8:00 மணிக்கு மேல் திருச்செந்தூருக்கு இயக்கி, மீண்டும் அதிகாலையில் அங்கிருந்து நெல்லைக்கு இயக்க வேண்டும்.

பெங்களூருவுக்கு புதிய ரயில்: திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான இளைஞர்கள் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளர்களாகவும், பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக திருச்செந்தூரிலிருந்து பெங்களூருவுக்குப் புதிய நேரடி ரயில் சேவையைத் தொடங்க வேண்டும்.

ரயில் நிலைய விரிவாக்கம்: தினமும் 50,000-க்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மீகத் தலமாகத் திருச்செந்தூர் திகழ்கிறது. தற்போதுள்ள ரயில்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால், புதிய ரயில்களை இயக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், போதிய நடைமேடைகள் (Platforms) மற்றும் தண்டவாளங்கள் இல்லாதது பெரும் தடையாக உள்ளது. எனவே, திருச்செந்தூர் ரயில் நிலையத்தைப் போர்க்கால அடிப்படையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி, அவற்றை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory