» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிப்காட் தொழில்துறை பூங்கா : ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம்

திங்கள் 16, பிப்ரவரி 2026 5:56:43 PM (IST)

தூத்துக்குடி சிப்காட் தொழில்துறை பூங்கா குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம், குமாரகிரி ஊராட்சி புதுக்கோட்டையில் உள்ள சத்யா மஹாலில், தூத்துக்குடி வட்டத்தில் அமையவுள்ள புதிய சிப்காட்  தொழில்துறை பூங்கா குறித்த சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் அல்லிக்குளம், கீழத்தட்டப்பாறை, பேரூரணி, உமரிக்கோட்டை, மேலத்தட்டப்பாறை, இராமசாமிபுரம் மற்றும் தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சிப்காட் தொழில்துறை பூங்கா தொடர்பான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு வருகை தந்திருக்க கூடிய அனைத்து பொதுமக்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

இத்திட்டம் குறித்து முழுமையான மற்றும் விரிவான விளக்க காட்சியினை சுற்றுச்சூழல் ஆலோசகர்  வழங்கியிருக்கிறார். இக்கூட்டத்திற்கு வருகை தந்திருக்க கூடிய பொதுமக்களாகிய நீங்கள் இதுகுறித்த கருத்துகளை தெரிவிக்கலாம். இக்கருத்துக்களை தெரிவிக்கின்ற பொழுது உங்கள் பெயர் மற்றும் விவரங்களை சொல்லி தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன்.

இக்கூட்டத்தில் முதன்மையாக கூறப்பட்ட 7 ஊர்களைச் சார்ந்த பொதுமக்கள் உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம். நீங்கள் என்ன கருத்துகளை இங்கு கூறினாலும், அதனை முழுமையாக பதிவேற்றம் செய்து, அதனை சுற்றுசூழல் அமைச்சகத்திற்கு பதிவு செய்து அனுப்பி வைக்கப்படும். எனவே, உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். 

குறிப்பாக, இத்திட்டம் அமையவுள்ள 07 ஊர்களைச் சார்ந்த பொதுமக்கள் உங்கள் கருத்துகளை முதலில் தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்காக 10 கிலோ மீட்டர் வரை சுற்றியுள்ள ஊர்களைச் சார்ந்த பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். ஏனென்றால், சுற்றுசூழல் மதிப்பீட்டு அறிக்கையில் இந்த 10 கிலோ மீட்டர் தொலைவு வரை சுற்றியுள்ள கிராமங்களின் சுற்றுசூழல் கூறுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. 

அதன்பின்னர், இந்த 10 கிலோ மீட்டர் தொலைவினை கடந்து, அதற்கு அப்பால் உள்ள ஊர்களிலிருந்து பொதுமக்கள் வருகை தந்திருந்தால் அவர்களும் கருத்துகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் இத்திட்டம் தொடர்பான கருத்துகளை பொதுமக்கள் தெரிவித்தனர். அதன் விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory