» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.60.98 லட்சம் ரொக்கம்; ரூ.4 லட்சம் மதுபானங்கள் பறிமுதல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:48:15 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.60.98 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில், இன்று வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலர் - மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் வெளியிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள்:
மொத்த ரொக்கத்தொகை: 60 லட்சத்து 98ஆயிரத்து 830.
மதுபானங்கள்: ரூ.4,08,449 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருட்கள்: ரூ.6,80,640 மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளன என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:29:36 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:22:40 PM (IST)

இது விசுவாசத்திற்கும் துரோகத்திற்குமான தேர்தல்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆவேசப் பேச்சு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:36:02 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டி : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:46:00 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 460 புதிய சிசிடிவி கேமராக்கள்: எஸ்பி மதன் தொடங்கி வைத்தார்
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:34:21 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் மாணவர்களுக்கான மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:22:26 PM (IST)







