» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் சட்டத்தில் கைது!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:29:36 PM (IST)

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மீது, தமிழகத் தடுப்புக் காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகசாமி (எ) ஆனந்த் (எ) ஆனந்தகுமார் (37) என்பவர், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவரது தொடர்ச்சியான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக, இவரைத் தமிழகத் தடுப்புக் காவல் சட்டத்தின் (1982) கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குப் பரிந்துரை செய்தார்.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. மதன் ஆலோசனையின் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆறுமுகசாமியைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, சிப்காட் காவல் நிலைய போலீசார் இன்று ஆறுமுகசாமியைக் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.  மாவட்டத்தில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory