» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிவி பார்ப்பது போல் வந்து கைவரிசை: மூதாட்டியிடம் நகை திருடிய பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்!

சனி 4, ஏப்ரல் 2026 8:39:16 AM (IST)

திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உடல்நலம் குன்றிய மூதாட்டியிடம் நகை திருடிவிட்டு 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை, திருச்செந்தூர் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கேசவ ஆதித்தன். இவரது மனைவி திரிபுரசுந்தரி (78). கணவர் மறைந்துவிட்ட நிலையில், பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வந்ததால், பார்வைக் குறைபாடு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திரிபுரசுந்தரியைப் பராமரிக்க இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஒரு நாள் பணியாளர்கள் வராத நேரத்தில், திரிபுரசுந்தரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட அக்கம் பக்கத்தில் வசித்து வந்த பாரூக் என்பவரது மகன் அகமது மீரா சாகிப் (52), தொலைக்காட்சி பார்ப்பது போல மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அங்கு மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட அகமது மீரா சாகிப், அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, அரை பவுன் மோதிரம் மற்றும் அரை பவுன் கம்மல் என மொத்தம் 4 பவுன் நகைகளைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், திருச்செந்தூர் - நெல்லை சாலையில் அவர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அகமது மீரா சாகிப்பைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து திருடப்பட்ட நகைகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். முதியவர்களைக் குறிவைத்துத் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory