» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாண்டியர் காலத்தில் செயற்கை முறையில் முத்து வளர்ப்பு: வரலாற்று ஆய்வாளர் இராஜேஷ் செல்வரதி புதிய தகவல்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 11:20:32 AM (IST)

சங்க காலப் பாண்டியர்கள் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பில் (சதுப்பு நிலங்கள்) திட்டமிட்டு முத்துக்களை விளைவித்தனர் என்பதற்குப் பல்வேறு இலக்கிய மற்றும் தொல்லியல் சான்றுகள் உள்ளதாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பெ. இராஜேஷ் செல்வரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் "முத்து விளை கழனி முந்நீர் வரைப்பில்" (வரி: 144) என்ற மதுரைக்காஞ்சி பாடலை அடிப்படையாகக் கொண்டு அவர் விளக்குகையில்:
விளை: முத்துக்கள் தானாகக் கிடைப்பது மட்டுமல்லாமல், அவை 'பயிரிடப்பட்டு' விளைவிக்கப்பட்டன என்பதைக் குறிக்கிறது.
கழனி: பொதுவாக வயலைக் குறிக்கும் இச்சொல், இங்கு முத்து விளைவிக்கப் பயன்படுத்தப்பட்ட மருத நிலம் போன்ற செழிப்பான சதுப்பு நிலப் பகுதியைக் குறிக்கிறது.
முந்நீர்: ஆற்று நீர், ஊற்று நீர் மற்றும் கடல் நீர் ஆகிய மூன்றும் கலந்த 'கலப்பு நீர்' (Brackish water) சூழலில் முத்துக்கள் வளர்க்கப்பட்டதைக் காட்டுகிறது.
வரைப்பில்: இது மதில் அல்லது சுவரால் பாதுகாக்கப்பட்ட எல்லைக்குட்பட்ட நீர்நிலையைக் குறிக்கிறது.
ஆய்வுத் தரவுகள்: வே. பனையூர் மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் 1778-ம் ஆண்டின் 'இராபர்ட் ஓரம்' வரைபடத்தின் தரவுகளைக் கொண்டு, இப்பகுதிகளில் கடல்சார் புதைபடிவ எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை மத்திய விலங்கியல் துறையிடம் (ZSI) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம், பாண்டிய மன்னர்கள் கால்வாய்கள் வழியாகக் கடல் நீரை உட்புகுத்தி, மழை நீர் மற்றும் நிலத்தடி நீருடன் கலந்து பதப்படுத்தி, பாதுகாக்கப்பட்ட நீர்நிலைகளில் உயர்தர வெண் முத்துக்களைப் பயிரிட்டனர் என்பது புலனாகிறது.
உலகின் முதல் 'செயற்கை முத்து உற்பத்தியாளர்கள்' தமிழர்களே என்பதை நிரூபிக்க, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் இந்திய விலங்கியல் ஆய்வுத் துறை (ZSI) மற்றும் இந்தியப் புவியியல் ஆய்வுத் துறை (GSI) விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என இராஜேஷ் செல்வரதி கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: புரட்சிகர இளைஞர் முன்னணி அறிவிப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 10:38:19 AM (IST)

டிவி பார்ப்பது போல் வந்து கைவரிசை: மூதாட்டியிடம் நகை திருடிய பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்!
சனி 4, ஏப்ரல் 2026 8:39:16 AM (IST)

தூத்துக்குடியில் மீனவருக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு!
சனி 4, ஏப்ரல் 2026 8:32:11 AM (IST)

ஓட்டப்பிடாரத்தில் வெற்றி உறுதி: ஏப்.6-ல் வேட்புமனு தாக்கல் : டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி.
சனி 4, ஏப்ரல் 2026 8:19:23 AM (IST)

கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:29:36 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:22:40 PM (IST)







