» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு!

சனி 7, பிப்ரவரி 2026 9:06:58 PM (IST)



சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த நடைபாதை ஆக்கிரமிப்புப் பிரச்சினை, அதிகாரிகளின் சிறப்பான முயற்சியால் இன்று சுமுகமாகத் தீர்க்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் புதுமனை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர்  எம்.சி. சண்முகையா அறிவுறுத்தலின்படி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். தாசில்தார்  ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை உறுதி செய்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தையால், ஆக்கிரமிப்பு செய்த நபரே தானாக முன்வந்து ஆக்கிரமிப்பை இன்று அகற்றினார். பிரச்சினையை அமைதியான முறையில் கையாண்டு, வழி ஏற்படுத்திக் கொடுத்த எம்.எல்.ஏ, தாசில்தார் மற்றும் சிறப்பாகச் செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் ஆகியோருக்குப் பொதுமக்கள் நேரில் சென்று நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory