» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை!

சனி 7, பிப்ரவரி 2026 3:54:37 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைதூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவிட்டார்.

அதன்படி அனைத்து உட்கோட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கை மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு ஜனவரி மாதத்தில் மட்டும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆகிய எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாக இருந்த வந்த 99பேர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 17 குற்றவாளிகள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழும், 20பேர் மீது பிணைப்பத்திரம் பெறப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory