» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நில அதிர்வு கண்காணிப்பு மையம் : ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு

சனி 7, பிப்ரவரி 2026 4:43:15 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நில அதிர்வு கண்காணிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர்  க. இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புவியியல் மாற்றங்கள் மற்றும் நில அதிர்வுகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும் நோக்கில் இந்த மையம் நவீன தொழில்நுட்பத்துடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது, கண்காணிப்பு கருவிகளின் செயல்பாடு மற்றும் தரவுகளைப் பதிவு செய்யும் முறை குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன்,  மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்த மையம் முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory