» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா, கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை!
சனி 7, பிப்ரவரி 2026 8:21:24 PM (IST)
தூத்துக்குடியில் கஞ்சா, கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த மரிய நவமணி சுமைலன் (40) மற்றும் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் (41) ஆகியோர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி தென்பாகம் மற்றும் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி 2பேரையும் நேற்று (06.02.2026) போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு!
சனி 7, பிப்ரவரி 2026 9:06:58 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 பணியிடங்கள் : பிப்.16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:29:54 PM (IST)

தூத்துக்குடியில் நில அதிர்வு கண்காணிப்பு மையம் : ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு
சனி 7, பிப்ரவரி 2026 4:43:15 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகள் : ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்!
சனி 7, பிப்ரவரி 2026 4:20:59 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் தகவல்!
சனி 7, பிப்ரவரி 2026 4:11:34 PM (IST)









