» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)
திமுக எம்.பி. கனிமொழி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேசிய கல்விக் கொள்கை – 2020 (NEP) எந்த மொழியையும் கட்டாயப்படுத்துவதில்லை என்றும், மாநிலங்களுக்கு அவர்களது மொழி, பண்பாடு, கல்வி தேவைகளைப் பொருத்து முழு சுதந்திரம் அளிக்கும் கொள்கைதான் என்றும் விளக்கினார்.NEP-ன் அடிப்படை நோக்கம்,மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி, திறன் மேம்பாடு,ஆராய்ச்சி மற்றும் புதுமை,உலகளாவிய தரத்திற்கு இணையான கல்விஆகியவற்றை வழங்குவதே தவிர, ஹிந்தி திணிப்பது அல்ல என்று சித்ராங்கதன் தெரிவித்தார்.
மேலும்,"ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியும் கட்டாயம் இல்லை. மூன்று மொழிக் கொள்கை என்பது மாநிலங்கள் விரும்பினால் மட்டுமே அமல்படுத்தக்கூடியது. தமிழ்நாடு இதுவரை இரண்டு மொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறது என்பதையும், அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டே வந்துள்ளது. நிதி வழங்குவதற்கும் மொழிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை”என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மத்திய அரசு கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு, புதிய பள்ளிகள், மருத்துவக் கல்லூரிகள்,தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், இ-கல்வித் திட்டங்கள் ஆகியவற்றிற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி வழங்கியிருப்பதை நினைவூட்டிய சித்ராங்கதன் "மொழி காரணமாக நிதி மறுக்கப்பட்டதாக ஒரு ஆதாரத்தையாவது கனிமொழி காட்ட முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சியின் கல்வித் தோல்விகளை மறைக்கவும், வரவிருக்கும் அரசியல் சூழலை எதிர்கொள்ளவும், தேசிய கல்விக் கொள்கையை தவறாக சித்தரித்து மக்களிடையே பயத்தை ஏற்படுத்துவது திமுகவின் வழக்கமான அரசியல் நாடகமாகும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
"தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் உண்மையான மரியாதை அளித்து வருவது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசே. செம்மொழி அந்தஸ்து முதல் தமிழ் ஆய்வு மையங்கள் வரை பல்வேறு நடவடிக்கைகள் இதற்கு சான்று. உண்மைகளை மறைத்து அரசியல் செய்யும் திமுக தலைவர்கள் மக்கள் முன் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை”என்று சித்ராங்கதன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







