» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவர் பலி : சுற்றுலா முடிந்து திரும்பியபோது சோகம்!

சனி 7, பிப்ரவரி 2026 11:40:27 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரிக்கு கல்விச் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர், பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், நேற்று காலை பள்ளி வாகனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சுற்றுலா சென்றனர். நாள் முழுவதும் பல்வேறு இடங்களைப் பார்வையிட்ட மாணவர்கள், மாலையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தூத்துக்குடி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.

பள்ளி வாகனம் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் புறவழிச்சாலை பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்த ஒரு மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த மாணவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில், உயிரிழந்த மாணவர் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டியைச் சேர்ந்த நரேன் குமார் (15) என்பது தெரியவந்தது. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வள்ளியூர் காவல் நிலைய போலீசார், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவன் உயிரிழந்த தகவல் கிடைத்ததும், பள்ளி நிர்வாகிகள் உடனடியாக வள்ளியூருக்கு விரைந்தனர். மகிழ்ச்சியாகச் சென்ற கல்விச் சுற்றுலா, மாணவனின் உயிரிழப்பில் முடிந்திருப்பது சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory