» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் அருகில் மது குடித்ததைக் கண்டித்ததால் வாலிபர் கொலை: 3 மீன் வியாபாரிகள் கைது!

சனி 7, பிப்ரவரி 2026 8:47:52 AM (IST)

கோவில்பட்டியில் வீட்டின் அருகில் மது குடித்ததைக் கண்டித்ததால் வாலிபரை கற்களால் தாக்கிக் கொலை செய்த 3 மீன் வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (28) என்பவர், திருப்பூர் பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆவல்நத்தம் பாலம் அருகே அவர் மர்ம நபர்களால் கற்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுப் பிணமாகக் கிடந்தார். 

விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரிகளான வேல்முருகன் (35), அசோக் குமார் (28) மற்றும் முனியசாமி (35) ஆகியோருக்கும் கார்த்திக்கிற்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று அவர்கள் கார்த்திக் வீட்டின் அருகே மது குடித்ததைக் கார்த்திக் கண்டித்ததால், ஆத்திரமடைந்த மூவரும் அவரை செங்கற்களால் தாக்கிக் கொலை செய்துள்ளனர். மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து

தமிழன்Feb 7, 2026 - 10:04:51 AM | Posted IP 104.2*****

காரணம் அரசு டாஸ்மாக். வாழ்க திராவிடம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory