» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி

வியாழன் 5, பிப்ரவரி 2026 3:24:43 PM (IST)

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மதுக் கொடுமை இல்லாத, கனிமவளக் கொள்ளை இல்லாத, அரசு வேலைகளில் ஊழலற்ற நேர்மையான நிர்வாகமே எங்களது கொள்கை," என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : ஜனவரி 7-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற கட்சியின் பிரம்மாண்ட மாநாட்டுத் தீர்மானங்களை கிராமங்கள் தோறும் கொண்டு செல்லப்படும். தொடர்ந்து தென்காசி, சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 11-ஆம் தேதி வரை நடைபெற ஆலோசனைக் கூட்டம் உள்ளது.

தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகள் வலுவாக நடைபெற்று வருகின்றன. வரும் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சட்டமன்றத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் அங்கமாக இருக்கும்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட 5 தமிழர்கள் ஆப்பிரிக்காவின் மாலி (Mali) நாட்டில் வேலைக்குச் சென்று, தற்போது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. அவர்களை உடனடியாக மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை தொடர்கதையாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வல்லநாடு விஏஓ படுகொலை மற்றும் கனிமவளக் கொள்ளையைத் தடுத்த அதிகாரிகள், செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள் கடும் கண்டனத்திற்குரியது. குவாரி உரிமையாளராக உள்ள ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பழனி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.ஊடகவியலாளர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலை ஒவ்வொரு செய்தியாளரும் தங்களுக்கு நேர்ந்ததாகக் கருதி குரல் கொடுக்க வேண்டும். 

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் அது இயந்திரத்தனமான மாற்றமாக இருக்கக்கூடாது. மதுக் கொடுமை இல்லாத, கனிமவளக் கொள்ளை இல்லாத, அரசு வேலைகளில் ஊழலற்ற நேர்மையான நிர்வாகமே எங்களது கொள்கை," என்று அவர் கூறினார். மேலும், 100 நாள் வேலைத் திட்டத்திற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory