» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சர்வதேச யோகா போட்டி: தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு மேயர் சொந்த செலவில் நிதியுதவி!

வியாழன் 5, பிப்ரவரி 2026 4:31:29 PM (IST)



சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வான தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி சொந்த செலவில் நிதியுதவி வழங்கினார். 

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தேசிய யோகா போட்டியில், தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த மாணவி அஸ்மா (8-ம் வகுப்பு) - மாநில அளவில் முதலிடம். மாணவர் சித்தார்த் (6-ம் வகுப்பு) - மாநில அளவில் இரண்டாமிடம். மாணவி மித்ராஸ்ரீ (5-ம் வகுப்பு) - வெற்றி பெற்று பதக்கங்களை வென்றனர்.

வரும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். சர்வதேசப் போட்டிக்குத் தகுதி பெற்றும், போதிய பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் ஒரு மாணவி போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அந்த மாணவியின் கல்வி மற்றும் குடும்பச் சூழலைக் கேட்டறிந்தார்.

உடனடியாக, சர்வதேசப் போட்டியில் பங்கேற்கத் தேவையான அனைத்துச் செலவுகளையும் தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்குவதாக உறுதி அளித்தார். மேலும், மாணவியின் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, போட்டியில் பங்கேற்கத் தேவையான ஊக்கத்தை வழங்கினார்.

இதேபோல், தஞ்சாவூரில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்றதோடு, சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தற்போது தேசிய மேஜிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ள யூகேஜி மாணவி ஹர்ஷினியையும் மேயர் நேரில் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார்.

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் சர்வதேச அளவில் சிறந்து விளங்குவது பெருமையாக உள்ளது. மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சர்வதேசப் போட்டியில் பதக்கங்களை வென்று வர வேண்டும்," என மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்தினார்.

இந்நிகழ்வின் போது பள்ளி தலைமையாசிரியர் எமல்டா வெலன்சியா ஹெஸியா, யோகா பயிற்சியாளர் சுந்தரவேல், ஆசிரியர் அனிதா, கராத்தே மாஸ்டர் மாரிச்செல்வம் மற்றும் பெற்றோர்கள், மாநகராட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory