» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அசல் ஆவணங்களைத் திரும்ப வழங்காத வங்கிக்கு ₹60,000 அபராதம் : நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

வியாழன் 5, பிப்ரவரி 2026 8:43:45 PM (IST)

தொழில் கடனுக்காகப் பெற்ற அசல் ஆவணங்களைத் திரும்ப வழங்காத பொதுத்துறை வங்கிக்கு ₹60,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடியைச் சார்ந்த சீனிவாச ராகவன் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு பொதுத்துறை வங்கியிடம் தொழில் கடன் பெற்றுள்ளார். அதற்காக சொத்துக்களின் அசல் ஆவணங்களை வங்கியில் ஒப்படைத்துள்ளார். இதன் பின்னர் கடன் தொகை முழுவதையும் செலுத்தி முடித்துள்ளார். இதனை அடுத்து அசல் ஆவணங்களை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். 

ஆனால் பொதுத்துறை வங்கி மனுதாரருக்கு அசல் ஆவணங்களை திரும்ப வழங்கவில்லை. இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சேவை குறைபாடு, பொருள் நஷ்டம் மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 50,000,வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 60,000 ஐ வழங்க வேண்டும். இல்லையென்றால் அத் தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory