» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 10-ம் தேதி பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்: நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

வியாழன் 5, பிப்ரவரி 2026 8:01:33 PM (IST)



தூத்துக்குடியில் வரும் 10-ம் தேதி பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் திராவிட மாடல் திமுக அரசின் அரசியல் போக்குகள், மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் ஆட்சி தோல்விகளை மக்கள் முன் வெளிச்சம் போடும் வகையில், பாஜக தலைமை எடுத்த முடிவின் பேரில், மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. 

அதற்கான தூத்துக்குடி மகளிரணி சாா்பில் தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிப்ரவரி 10ம் தேதி தமிழக பாஜக மகளிரணி சார்பில், பெண்களின் பாதுகாப்பு, சட்டம்–ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து, விவிடி சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. 

சட்டம்–ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ள நிலையில், பெண்கள் அச்சத்தில் வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் பிப்ரவரி 10ம் தேதி மகளிரணியும், 12ம் தேதி – இளைஞரணியும், 18ம் தேதி– பட்டியல் அணியும் என மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்ந்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்று, திமுக அரசின் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து குரல் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
கூட்டத்தில் மாவட்ட தலைவர் சித்ராங்கதான், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ்,  மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் தேன்மொழி, மகளிர் அணி மாவட்ட தலைவர் வெள்ளத்தாய் உள்பட மகளிரனி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory