» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேல் அரசடியில் சோழர்களின் நிசம்பசூதனி அம்மன் சிற்பம்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
புதன் 4, பிப்ரவரி 2026 5:38:01 PM (IST)
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியில் உள்ள மேல் அரசடி கிராமத்தில் சிதைவுற்ற நிலையில் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை தலை துண்டிக்கப்பட்ட ஸ்ரீ அரிய நாச்சியம்மன், சோழர்களின் குலதெய்வம் -ஸ்ரீ நிசும்பசூதனி அம்மன் மற்றும் ஸ்ரீ நந்தி தேவர் சிலைகள் ஆகும். இத்தகைய தலை துண்டிக்கப்பட்டு பல சிற்பங்கள் சுற்றுப்புற பகுதிகளில் காணப்படுகிறது என்பது இந்த பகுதியின் அன்னியர்கள் சூரையாடல் நிகழ்வின் சாட்சிகளாக உள்ளன.
இது குறித்து தூத்துக்குடியினை சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.இராஜேஷ் செல்வரதி கூறியதாவது "நிசும்பசூதனி வரலாறு என்பது, சோழர்களின் வெற்றித் தெய்வமான அன்னை பராசக்தியின் வடிவம்; சும்பன், நிசும்பன் போன்ற அரக்கர்களை அழித்ததால் இப்பெயர் பெற்றது; இவளை வணங்கிச் செல்லும் சோழ மன்னர்கள் போர்களில் வெற்றி கண்டனர்; தஞ்சை வடபத்ரகாளி அம்மன் கோவிலில் இன்றும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். சோழர்களின் ஆட்சியை நிறுவிய விஜயாலய சோழர் காலத்தில், இச்சிலை வடிக்கப்பட்டு தஞ்சையில் நிறுவப்பட்டதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
விஜயாலய சோழன்: பிற்காலச் சோழப் பேரரசின் நிறுவனர் (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு). காவிரி டெல்டாவைக் கைப்பற்றி தஞ்சாவூரைத் தலைநகராக அமைத்தார். பல்லவர்களைத் தோற்கடித்து சோழர்களின் பெருமையை நிலைநாட்டினார். சுருக்கமாக, விஜயாலயன் சோழப் பேரரசைத் தொடங்கினார், மதுரை வரை விரிவுபடுத்தும் பணியை அவருடைய சந்ததியினர் செய்தனர். முழு தென்தமிழகத்தையும் கைப்பற்றும் பணி அவருடைய மகன் ஆதித்தன் மற்றும் பிற்கால மன்னர்களின் சாதனையாகும்.
மதுரையை வென்றவர்கள்: முதலாம் பராந்தக சோழன் (Parantaka I): இவர் "மதுரை கொண்ட பரகேசரிவர்மன்" என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டார், அதாவது பாண்டியர்களின் தலைநகரான மதுரையை வென்றார். முதலாம் இராசராசன் (Rajaraja I) மற்றும் இராசேந்திர சோழன் (Rajendra I) போன்றோர்: இவர்களது ஆட்சிக்காலத்தில் சோழப் பேரரசு உச்சத்தை அடைந்து, பாண்டியப் பகுதிகள் சோழர் கட்டுப்பாட்டில் இருந்தன.
உதாரணமாக: நமது பட்டினமருதூர் என்பது பொ.ஊ 875 முதல் 1090 வரையிலான காலகட்டத்தில் ‘குரங்குடிநாடு’ என்ற பகுதியில் ‘கேரளாந்தகபுரம்’ என வழங்கப்பட்டுள்ளது. அது சமயம் இதன் கழிமுகத்துவாரம் மலட்டாறு எனப்படும் நதியின் பெயரோடு இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இராஜஇராஜ சோழன் ‘விழிஞ்ஞம்’ துறைமுகத்தினை கைப்பற்ற செல்லும் போது ‘அமரபுயங்கன்’ என்ற பாண்டிய மன்னன் இடைமறித்ததால் அவரையும் வெற்றி கொண்ட பின்புதான் ‘மும்முடி கொண்ட சோழன்’ என அழைக்கபட்டுள்ளார் என்பதும்; தனது அண்ணன் ஆதித்த கரிகாலனின் நினைவாக ‘கேரளாந்தக நுலைவாயில்’ என்று தஞ்சை பெரிய கோவிலின் பிராதன நுலைவாயிலுக்கு பெயர் சூட்டினார் என்பதும் வரலாறு எனும் பட்சத்தில், இந்த தென்மதுரை என கருதப்படும் நமது பட்டினமருதூர் பகுதியினையும் ‘கேரளாந்தகபுரம்’ என பெயர் மாற்றம் செய்திருக்கவேண்டும் என்பது எங்கள் கருத்து.

இவைகளுக்கு சான்றாக நாம் பட்டினமருதூரில் உள்ள ஸ்ரீ வீரபாண்டிய விநாயகர் ஆலயத்தில் மூன்று தலை மற்றும் ஐந்து சரீரங்கள் கொண்ட மணல் கலவைகளால் வடிவமைக்கப்பட்ட ‘குரங்குகளின் பாலியல் சிற்பத்தினை’ காணலாம். மேலும் நாம் கண்டெடுத்துள்ள 27 நாணயங்களில் 6 நாணயங்கள் சோழர் கால செப்பு நாணயங்கள் என்பதும், ஒரு நாணயம் கொல்லன்பரம்பு பகுதியில் கண்டெடுத்த 12ம் நூற்றாண்டின் வீரகேரளவர்மன் -1 காலத்தின் நாணயம் என்பதும் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற ஆட்சிமாற்ற விபரங்களை பரைசாற்றுகின்றன.
இராபர்ட் ஓரம் வரைபடத்தில் தருவைக்குளம் பகுதியில் வான் மற்றும் கொசுவார் தீவுகளின் மேற்கே உள்ள கடற்கரையில் கலந்த செங்கோட்டை மற்றும் குற்றாலம் பகுதியில் இருந்த வந்த ஒரு நதியானது இன்று தடம் மாறி போயுள்ளது என்பது இந்த பகுதியின் இயற்கைப் பேரிடருக்கு முக்கிய அறிவியியல் சான்றாக அமைகின்றது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 5 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த 3 வாலிபர்கள் கைது
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:48:24 PM (IST)

அசல் ஆவணங்களைத் திரும்ப வழங்காத வங்கிக்கு ₹60,000 அபராதம் : நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:43:45 PM (IST)

விளாத்திகுளத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:14:18 PM (IST)

தூத்துக்குடியில் 10-ம் தேதி பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்: நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:01:33 PM (IST)

கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:30:30 PM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் ஆபத்தான பள்ளங்கள் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகார்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 4:43:22 PM (IST)









