» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிவன்கோவிலில் சமபந்தி அன்னதானத்தில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
புதன் 4, பிப்ரவரி 2026 10:18:27 AM (IST)

தூத்துக்குடி சிவன்கோவிலில் சமபந்தி அன்னதானத்தில் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து உணவருந்தினாா்.
தூத்துக்குடி தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57வது நினைவுநாளை முன்னிட்டு அருள்மிகு பாகம்பிாியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் திருக்கோவிலில் நடைபெற்ற சமபந்தி அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து உணவருந்தினாா். முன்னதாக இந்துக்களின் முதற்கடவுளான விநாயகரை வணங்கி தொடர்ந்து சங்கரராமேஸ்வரா் பாகம்பிாியாளை தாிசனம் செய்து கோவில் பிரகாரம் சுற்றிவந்தாா்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் அன்புமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், அறங்காவலா் குழு தலைவர்கள் செந்தில்குமாா், கந்தசாமி, சிவன்கோவில் நிர்வாக அலுவலா் தமிழ்ச்செல்வி, தலைமை அர்ச்சகா் செல்வம்பட்டா், வருவாய் ஆய்வாளர் ரூக்மணி, அறங்காவலா்கள் ஆறுமுகம், ஜெயலட்சுமி, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், பொறியாளர் அணி தலைவா் பழனி, கலை இலக்கிய அணி துைண அமைப்பாளர் கல்யாணசுந்தரம், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், கணக்கா் சுப்பையா, மற்றும் அல்பட், உள்பட கோவில் நிர்வாகதஸ்கா்கள் அர்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.
திருக்கோவில் பணியாளா்கள் சங்கம் சாா்பில் சிவன்கோவில் பெருமாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை பராமாிப்பு செய்து பணியாளா்கள் பலனடையும் வகையில் அதை செய்து கொடுக்க வேண்டும் என்று கோாிக்கை மனு வழங்கினாா்கள். உடனடியாக இணைஆணையாிடம் அமைச்சர் கீதாஜீவன் அதற்கான திட்ட மதிப்பீடுகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 5 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த 3 வாலிபர்கள் கைது
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:48:24 PM (IST)

அசல் ஆவணங்களைத் திரும்ப வழங்காத வங்கிக்கு ₹60,000 அபராதம் : நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:43:45 PM (IST)

விளாத்திகுளத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:14:18 PM (IST)

தூத்துக்குடியில் 10-ம் தேதி பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்: நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:01:33 PM (IST)

கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:30:30 PM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் ஆபத்தான பள்ளங்கள் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகார்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 4:43:22 PM (IST)









