» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கெண்டை மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் பயிற்சி: செப்.14 வரை முன்பதிவு செய்யலாம்

வியாழன் 11, செப்டம்பர் 2025 3:09:33 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையம் சார்பில் கெண்டை மீன் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்பம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமாக விளங்கும் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடியின் கீழ் இயங்கிவரும் மீன்வளர்ப்புத்துறையில் வருகின்ற 15.09.2025 முதல் 30.09.2025  "நான் முதல்வர் வெற்றி நிச்சியம் திட்டத்தில்” கீழ்  "கெண்டை மீன் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்பம் பயிற்சி” அளிக்கப்பட உள்ளது. 

பயிற்சியின் முடிவில் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் செப்டம்பர் மாதம் 14ம் தேதி மாலை 5.00 மணிக்குள் தங்கள்து பெயரை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. உதவிப்பேராசிரியர், மீன்வளர்ப்புத்துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி. தொலைபேசி எண் 0461 2340554 அலைபேசி எண்: 9884213262.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory