» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுடலை மனைவி மருதக்கனி (46). இவர் நேற்று மதியம் கால்நடைகளுக்கு சோழபுரம அருகே தூத்துக்குடி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மையத்தடுப்பில் வளர்ந்துள்ள புற்களை அறுத்து கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி மையத்தடுப்பில் புல் அறுத்துக் கொண்டிருந்த மருதக்கனி மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கார் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார். இச்சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரான தூத்துக்குடி போல்பேட்டை சேர்ந்த அழகர்சாமி மகன் ரமேஷ்குமார் (38) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)










