» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)



தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் வாகைக்குளம் வந்தார். அவருக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அதனை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, தூத்துக்குடி எம்பி கனிமொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட்ஜான், ஆணையர் ப்ரியங்கா, அமைச்சர்கள் நேரு, ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி. வில்சன், எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ரூபி மனோகரன், ராஜா, தமிழரசி, அப்துல் வஹாப், தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி, திருநெல்வேலி மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் வரவேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory