» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி வாலிபர்கள் 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள அய்யாபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒடிசாவிலிருந்து சிலர் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார் கயத்தாறு -அய்யாபுரம் சாலையில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அய்யாபுரம் அருகே 4 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் கையில் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர்.
அந்த பையில் 2கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தூத்துக்குடி எஸ்.கே.எஸ்.ஆர்.காலனி மாரிச்செல்வம் (21), போல்பேட்டையை சேர்ந்த மாரிபிரபாகரன் (25), நந்தகோபாலபுரத்தை சேர்ந்த சிவா (25), அன்பு நகரைச் சேர்ந்த சிவலிங்கம் (26) ஆகியோர் எனவும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, இப்பகுதியில் விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4பேரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)










