» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெள்ளையன் முதலாமாண்டு நினைவு தினம் : ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:45:27 PM (IST)

தூத்துக்குடியில், தமிழ்நாடு வணிக சங்க பேரவையின், மாநில தலைவர் வெள்ளையனுக்கு, முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் பிரதான பஜாரில், தாளமுத்து நகர் வட்டார வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் ஆர்.முத்துக்கனி தலைமை வகித்தார். செயலர் எஸ்.கிராஸ், பொருளாளர் எம்.அந்தோணி சௌந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவர் ஜெ.ஐவஹர் கலந்துகொண்டு, வெள்ளையன் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், மில்லர்புரம் ஹவுசிங் போர்டு சங்கத் தலைவர் ஆனந்த் சேகரன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் ஜெபஸ்டியான், வேல்முருகன், செல்வராஜ், ஐசக் மற்றும் தாளமுத்து நகர் வட்டார வியாபாரிகள் நலச் சங்க துணைத் தலைவர்கள் குருசாமி, முத்து, துணைச் செயலர்கள் பஷீர், தங்க மாரியப்பன், சட்ட ஆலோசகர் எஸ்.அய்யாதுரை, ஆலோசகர்கள் பாஸ்கர், அந்தோணி மிக்கேல், மனுவேல் பாண்டியன், கனகராஜ், குணா பாஸ்கர், ஜான்சன், மாடசாமி, சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)










