» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சென்டர் மீடியனில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : மேலும் ஒருவர் படுகாயம்!
வியாழன் 11, செப்டம்பர் 2025 11:05:00 AM (IST)
தூத்துக்குடியில் சென்டர் மீடியனில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயம் அடைந்தார்.
தூத்துக்குடி தெர்மல் நகர் சுனாமி காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் பிரகாஷ் (28). இவரது தெருவில் உள்ள கோவில் கொடை விழா நடந்தது. இதில், கலந்து கொள்வதற்காக அவரது உறவினரான ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ஜெயமுருகன் (24) என்பவர் பிரகாஷ் வீட்டுக்கு வந்திருந்தார்.
நேற்று இரவு கொடை விழா முடிந்ததும் ஜெயமுருகன் (24) ஊருக்கு புறப்பட்டார். பிரகாஷின் நண்பரான திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனி சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (25) அவரை தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறியதில் சென்டர் மீடியனில் மோதியது.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த முருகன் மற்றும் ஜெயமுருகன் ஆகிய இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முருகன் பரிதாபமாக இறந்தார். ஜெயமுருகன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் தெர்மல் நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அய்யம்பிள்ளை வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்ஸி விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)










