» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்குபோட்டு தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
வியாழன் 11, செப்டம்பர் 2025 10:43:22 AM (IST)
தூத்துக்குடியில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி ராமசாமிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்து (59) இவர். இவரது மனைவி அன்னலட்சுமி. இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். முத்து திருச்செந்தூர் ரோட்டில் உள்ள பெயிண்ட் கம்பெனியில் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி அன்னலட்சுமி உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்து 3 முறை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து உள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு காப்பாற்றியுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் தனது வீட்டில் அவர் சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார்.
அப்போது வீட்டிற்கு வந்த அவரது மருமகன், அவரை மீட்டு ஆட்டோ மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)










