» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரயில் முன்பு பாய்ந்து மீனவர் தற்கொலை : மனைவி, குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தில் சோகம்!
வியாழன் 11, செப்டம்பர் 2025 10:33:54 AM (IST)
தூத்துக்குடியில் மனைவி, குழந்தைகளை பிரிந்த விரக்தியில் மீனவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி கிழக்கு காமராஜர் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் ராஜாமணி (33) மீனவர். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வசித்து வருகிறார். இதனால் அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சில்வர்புரத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் தனது வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற அவர் நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்துக்குடி இருப்பு பாதை ரயில்வே காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
SivaSriSep 11, 2025 - 01:08:48 PM | Posted IP 162.1*****
வணக்கம் எங்கள் பதிவுகளை பிறர் மனம் பாதிக்காத அளவுக்கு பதிவு கேட்கின்றீர்கள்.ஆனால் நீங்கள் எல்லோர்க்கும் பொதுவாக செய்தி வழங்கி வருகின்றீர்கள்.ஆனால் மீனவர் ரயில் முன் பாய்ந்து என்று பதிவு.ஏன் அவர் பெயர் பதிவு செய்யலாமே.இனி குலத்தொழில் கிடையாது எல்லாரும் எல்லா வேலைகளையும் தெரிந்து கொள்ளனும்.இது என்னுடைய கருத்து அவ்வளவுதான்.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)











SivaSriSep 11, 2025 - 01:08:51 PM | Posted IP 162.1*****