» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 13ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்: மாவட்ட நீதிபதி தகவல்!
வியாழன் 11, செப்டம்பர் 2025 8:38:05 AM (IST)
தூத்துக்குடி, கோவில்பட்டி உள்பட 7 நகரங்களில் நாளை மறுநாள் (13ஆம் தேதி) சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஆர்.வசந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) எனது (மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.வசந்தி) தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூரில் 2 அமர்வுகளும், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் தலா ஒரு அமர்வு உட்பட ஆக மொத்தம் 15 அமர்வுகள் நடக்கிறது.
இதில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது. மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)










