» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தவறவிட்ட நகைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு!

வியாழன் 11, செப்டம்பர் 2025 8:36:10 AM (IST)



சாத்தான்குளம் அருகே வியாபாரி தவறவிட்ட நகைப்பையை ஒப்படைத்த காவலரை காவல் துணை கண்காணிப்பாளா் மற்றும் போலீசார் பாராட்டினர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் அன்னாள்நகரை சேர்ந்த இருதயம் மகன் சகாய ஜெபஸ்டின் (33). வியாபாரி. இவர் சென்னை மரபேரு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தட்டாா் மடத்திற்கு திருவிழாவுக்காக இவா், மனைவியுடன் காரில் சென்றுள்ளாா். அப்போது பேய்க்குளம் அருகே உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு சென்னைக்கு சென்றுள்ளாா். 

சகாய ஜெபஸ்டின் காரில் இருந்த கைப்பையை தவற விட்டிருந்தாா். பேய்குளம் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலா் மாணிக்கராஜ் அந்தப் பையை கண்டெடுத்து சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளா் ஆவுடையப்பனிடம் ஒப்படைத்தாா். பையில் 2.75 பவுன் நகையும், 110 கிராம் வெள்ளியும், 400 ரூபாய் இருந்தது. 

தவறவிட்ட பையில் இருந்த முகவரி வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அது சகாய ஜெபஸ்டின் உடையது என தெரியவந்ததையடுத்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் காவல் நிலையம் வந்த அவரிடம் நகைப்பையை காவல் துணை கண்காணிப்பாளா் ஏற்பாட்டில் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஒப்படைத்தாா். நகைப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த போலீஸ்காரரை டிஎஸ்பி மற்றும் போலீசார் பாராட்டினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory