» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முக்காணி புதிய பாலத்தில் போக்குவரத்து அனுமதி : வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம்!

வியாழன் 11, செப்டம்பர் 2025 8:19:13 AM (IST)



மழை வெள்ளத்தால் சேதமடைந்த முக்காணி தாமிரபரணி ஆற்றின் புதிய பாலத்தில் போக்குவரத்துக்கு போலீசார் அனுமதி அளித்தநிலையில், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றுவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 2023 டிசம்பர் மாதம் பெய்த அதி கனமழையால், முக்காணி புதிய பாலத்தின் நடுப்பகுதி சேதமடைந்து 2 அடிக்குக் கீழ் இறங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் மட்டும் அதில் செல்கின்றன. வாகனங்கள் செல்லாமலிருக்க ஆத்தூர் பேரூராட்சி நிர்வாகம், போலீசார் சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்ன.

பழைய பாலத்தின் இருபுறமும் இருந்த தடுப்புக் கம்பிகளும் வெள்ளத்தால் சேதமடைந்து அச்சுறுத்தலாக இருந்தது. பின்னர், கம்பிகள் அமைக்கப்பட்டன. புதிய பாலத்தில் போக்குவரத்து தடையால், தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் இருவழி வாகனங்கள் அனைத்தும் சிறிய பழைய பாலத்தின் வழியே சென்றுவருகின்றன. இதனிடையே, சேதமடைந்த புதிய பாலம் குறித்த ஆய்வறிக்கையை ஐஐடி துறையினர் தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையின் முக்கிய வழித்தடத்தை இணைக்கும் பாலமாக முக்காணி ஆற்றுப்பாலம் உள்ளது. இதன்வழியே நாள்தோறும் ஆயிரக் கணக்கிலும், விசேஷ நாள்களிலும் கூடுதலாகவும் வாகனங்கள் சென்று வருகின்றன. புதிய பாலம் சேதமடைந்ததால் வாகனங்கள் பழைய பாலம் வழியாகவே சென்றுவருகிறது. இந்நிலையில், இப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்து நெரிசல் எற்பட்டது. 

அதை சரிசெய்வதற்காக ஆத்தூர் போலீசார் புதிய பாலத்திலிருந்த தடுப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு அனுமதித்தனர். எனினும், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டது. புதிய பாலத்தில் போக்குவரத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தாத நிலையில், போக்குவரத்துக்கு போலீசார் அனுமதித்தது மக்களை அதிருப்திக்கும், அச்சத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. புதிய பாலத்தை விரைந்து சீரமைத்து, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory