» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளம் அருகே மாபெரும் மாட்டுவண்டி பந்தயம்

புதன் 10, செப்டம்பர் 2025 5:33:30 PM (IST)



விளாத்திகுளம் அருகே துலுக்கன்குளம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சந்திமரிச்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆதி தமிழ்குடி சாம்பவர் குல வேளாளர் சமுதாயம் சார்பாக நடத்தும் 5-ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் பூஞ்சிட்டு, தேன்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்றது.

போட்டியில் தேனி கம்பம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இருந்து 58 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. விளாத்திகுளம் - வேம்பார் சாலையில் பூஞ்சிட்டு பந்தயத்திற்கு போக வர 5 மைல் தூரமும், தேன்சிட்டு பந்தயத்திற்கு போக வர 4 மைல் தூரம் என நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

மாட்டு வண்டி எல்கை பந்தயங்களை, விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, அதிமுக முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தை கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஆ.சடையாண்டி ஆகியோர் கொடிஅசைத்து துவக்கி வைத்தனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக குத்துவிளக்கு, சுழல் கோப்பை ரொக்கப்பணம் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory