» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூர்ண சந்திரனுக்கு தூத்துக்குடியில் இந்து முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துகுமார் தலைமையில் சிவன் கோவில் தேரடி அருகில் இருந்து ஊர்வலமாக சென்று வைகுண்டபதி பெருமாள் கோவிலில் மோச தீபம் ஏற்றப்பட்டது. பிஜேபி கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி முன்னிலை வகித்தார்.மேற்கு மண்டல தலைவர் சுதாகர் தலைமையில் டுவிபுரம் 5 தெருவில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. சரவணகுமார், நாராயண ராஜ் மாவட்ட பொதுச் செயலாளர் மேற்கு மண்டல துணை தலைவர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
வடக்கு மண்டலம் சுந்தரவேல் புரம் மெயின் அம்பேத்கார் நகர் எதிரில் பாலமுருகன் கோபி தலைமையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. கிழக்கு மண்டலம் தச்சர் தெருவில் மாநகர மாவட்ட துணைத் தலைவர் ஆதிநாதன் ஆழ்வார் தலைமையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் மண்டல தலைவர்கள் கிளை பொறுப்பாளர்கள் ஆயாம் பொறுப்பாளர்கள் பரிவார அமைப்பை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)










